இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://muthuputhir.blogspot.com/2014/10/blog-post.html) சென்று விட்டு வரவும்.
வார்த்தைகளைத் தேட (அகரமுதலிகள், விக்கிபீடியா): http://muthuputhir.blogspot.com/2014/10/blog-post.html
இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthir(dot)mayam(at)gmail(dot)com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.சந்தானம் குறுக்கெழுத்துப் புதிர் - 7
வார்த்தைகளைத் தேட (அகரமுதலிகள், விக்கிபீடியா): http://muthuputhir.blogspot.com/2014/10/blog-post.html
இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthir(dot)mayam(at)gmail(dot)com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.
|
|
குறுக்காக:
5.விதி எழுதலை விடுத்து விடுவிட்டது.(6)
6.லகரக் கொக்கியில் கட்டி ஆடுவது. (2)
7.ககரங்கள் இடையில் சவுக்காரம் சேர்த்து துணி வெளு. (4)
9.நாகர்கோவில் பகுதியில் கிடைக்கும் கட்டுமானப் பொருள். (4)
10.என்ணெய்ப்பிசுக்குப் போக பாதி ரவை சேர்த்து அப்பு. (4)
12.ஒரு ராகத்துக்குள் கடைசி ஸ்வரம் நுழைத்துத் தொடங்கு. (4)
13.கிரி மாறி ஆரிய. (2)
14.1971ஆம் ஆண்டு நம்நாட்டுக்கு கிழக்கில் புதிதாக உருவான தேவசங்கம்.(6)
நெடுக்காக:
1.பதுமை கையில் வில். (2)
2.நெ 4இல் போடவேண்டியது.(4)
3.ஒளிந்துகொள்ள இடம் பத்துங்களா? (4)
4.ஒரு மாதத் தராசுக் குளியல். (6)
8.சரனது மாது குடியிருப்பின் வடிவம்.(6)
11.பாபு மாற்றும் பாவலர். (4)
12.உரல் உபயோகித்து செய்யப்படும் சமையல். (4)
15.30 மாதத்திற்கு ஒரு முறை வீடு மாற்றுபவன்.(2)
| ||||||
| உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
| மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
| உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
| ஆய்தம் | H : ஃ |