Monday, July 7, 2014

இராமச்சந்திரன் குறுக்கெழுத்துப் புதிர் - 1

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால்  இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பபார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும்  படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.

சொற்களைத் தேடவும், தேடிய சொல்லை உறுதிப் படுத்தவும் இவை உதவலாம் :
http://www.tamilvu.org/library/dicIndex.htm
http://agarathi.com/index.php
http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/
http://www.thamilworld.com/forum/index.php?showforum=72 ஆர்வி குறுக்கழுத்துப் புதிர்: 2014 - 1

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.செங்கதிர் பாதாதி கேசம் பாதி நம்பியா டென்னிஸ் வீரனை தந்தது?(4)
3.நகம் வெட்டல் அகம் கண்டால் அச்சு அப்படியே (3)
4.துவக்கம் முதல் பற்றற முடிந்தாலும் கலக்கத்தால் எச்சம் (4)
5.ஓதும் வேதத்து உட்பொருள் (2)
7.வேதம் போல் ஒலித்தாலும் கழலும் (2)
9.புகழ் பாடு (2)
10.பாதி தேடியவரும் அதன் வீச்சில் இறுதியில் மரித்தாரே (4)
11.ஆமையை ஒடுக்கி நிறுவு (2)
13.பிடி அசைந்து சென்றதில் அடிபட்டு வயிற்றை கலக்கி (4)
15.அடக்குமுறை செய்யும் கெட்டவனை முதலில் கண் மூடி கண்டுபிடி (4)
17.அயர்வை விலக்கி தலைஎழுத்தை மாற்றிய உழைப்பின் சான்று (4)
18.இமை குறைவு பெற்றால் தெய்வம் இன்றி புழுங்குதல் (3)

நெடுக்காக:
1.தலை அசலம் குமரன் இல்லம் (5)
2.யாரேயாம் ஊர்வது? யாவர் விலகுவது? என்னொருவன் சாந்துணையும் கல்லாதவாறு?((3,2)
3.நல்ல உறவுக்குள் தேன் (3)
6.தஞ்சை நாடர் நடுவிகந்து புயவலிக்கு ஆதாரம் (4)
8.பரதேசி ஊர் (3,2)
11.பொருளற்ற சொல்லை ஆட்டு (2)
12. இரண்டாவது அமைப்பில் தலையிழந்த வேந்தர் மகன் (4)
13.தீச்செயல்கள் மற்றும் பிறவினைகள் தீர்த்த அவதாரம் (3)
14. பருகும் தன்மை அன்று.ஊருடன் ஒத்து வாழ்தல் (3)
16. சொல்வழக்கில் விருந்தோம்பலை ஏலாமை பாதி பிணக்கு (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

1 comment :

  1. Thiru Nagamani's mail from me has not been delivered

    I hope nagamaniananadam@rediffmail.com is right

    His answers are right except for Serbia (home of Jokovich) and consequently sennimalai (senni = head)

    ReplyDelete

பின்பற்றுபவர்கள்

Visit or Stats